திருச்சி கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் பாலியல் தொந்தரவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை. ஏகலைவன் இளைஞர் பேரவை ஐஜியிடம் மனு.
திருச்சி ஐஜி யிடம் ஏகலைவன் இளைஞர் பேரவை சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுமைக்கும் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது எங்கள் அமைப்பு. பார்ப்பனிய எதிர்ப்பு, வலுவில்லாத எளிய மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாக பல்வேறு போராட்டங்களையும் சட்ட ரீதியாகவும் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தினை நடத்துவதன் மூலமாகவும் செயல்பட்டு வருகிறோம்.
இந்நிலையில் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல் என்ற மாணவர் தற்கொலைக்கு முயற்சித்து இருப்பதாக கேள்விப்பட்டு எமது அமைப்பு களத்தில் இறங்கி விசாரணை நடத்தியது. அதன்படி பல்வேறு மாணவ மாணவிகள் எமது அமைப்பை தொடர்பு கொண்டு கல்லூரியில் மாணவ மாணவிகளை ஒரு தலைபட்சமாகவும் சாதிய ரீதியாகவும் நடத்துவதாக கூறியதோடு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து மன ரீதியான துன்புறுத்துகளையும் செய்வதாகவும், கூறினார்கள்.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் 25ம் தேதி இதே கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் துன்புறுத்தலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை கல்லூரி நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் பண பலத்தினால் மூடி மறைத்து விட்டதாகவும் கூறினார்கள். அந்த வகையில் மேற்படி குமர வேலையும் கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த கல்லூரி முதல்வர் மற்றும் அவரைச் சேர்ந்த அவர்கள் கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு ஒரு நாள் காலதாமதம் ஆகிவிட்டது என்பதற்காகவே சுமார் இரண்டு மாதம் கல்லூரிக்கு வெளியிலேயே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாகவும் அவருடைய வாழ்க்கையை சீரழிக்கும் விதத்தில் நடந்து கொள்வதாகவும் கூறி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறினார்.
அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சையில் இருந்த நிலையில் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு புகார் வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். மேற்படி புகார் வாக்குமூலம் கொடுத்து இருந்தார் . இதல் எந்தவித வழக்குப் பதிவும் செய்யப்படாமல் காவல்துறையினரால் மூடி மறைக்கும் நோக்கத்தில் நடப்பதாக கூறினார்கள். கடந்த 19-07-2025 அன்று கே.கே.நகர் காவல் நிலையத்தில் தங்களது அலுவலக வாசலில் மேற்படி. நடந்து வரும் சட்டத்துக்கு புறம்பான செயல்களை தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் சியாமளாவின் பெயரில் காத்திருப்பு போராட்டத்திற்கான அனுமதி கேட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் எங்களை தொடர்பு கொண்டு நேரில் வருமாறும் கால அவகாசம் தருமாறும் கேட்டிருந்தார். நானும் எமது அமைப்பு சேர்ந்த வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவரின் தாயார், உள்ளிட்டவர்கள் சென்று டிஎஸ்பி இடம் பேசினோம். அன்று இரவு சுமார் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தார். அதற்காக 21-07-2025 திங்கட்கிழமை மாலை 6 மணி வரை கால அவகாசம் கேட்டிருந்தார் அதற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகதீசனும் உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6:00 மணி அளவில் மேற்படி மாணவர் குமரவேல் மற்றும் அவரது தாயாரை கல்லூரி நிர்வாகத்தினரும் – காவல்துறையை சேர்ந்த கொள்ளிடம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் சமயபுரம் காவல் ஆய்வாளர் ரகுராமன் ஆகியோர் உடனே கல்லூரிக்கு வருமாறு வரவழைத்து மிரட்டி எழுதி வாங்கியதோடு ஏதாவது பிரச்சனை செய்தால் மாணவரின் எதிர்காலமும் அங்கு பயின்று வரும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த மாணவியர்களின் எதிர்காலமும் சீரழித்து விடுவதாக மிரட்டி பணிய வைத்து இருப்பதாக மாணவ மாணவியர்கள் எங்களிடம் கூறினார்கள். கல்லூரி நிர்வாகம் இவ்வாறு நடந்து கொள்வது நாம் அறிந்த செய்தி தான் ஆனால் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று அவர்களுக்கு சேவையாற்றிடும் காவல் துறையும் கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக அவர்களுக்கு அடியாள் போல நடந்து கொள்வது சட்டத்திற்கும் இயற்கை நியதிக்கும் ஏற்றதல்ல. சட்டத்தின் ஆட்சி என்ற கூற்றை அது நிலைகுலைய செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. நேற்று முன்தினம் நமது மாநிலத்தின் காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் கொடுத்துள்ள சுற்றறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அருகமை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அந்த முதல் தகவல் கையை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு புதிய குற்றவியல் சட்டத்தின் படி அவர்கள் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது ஆனாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே புகார் கொடுத்தால் கூட அவர்கள் கையெழுத்து பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிராக இந்த வகையில் செயல்படுவார்கள் என்பது உண்மையிலேயே மன வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆகையால் தாங்கள் மேற்படி காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று எங்களது அமைப்பின் சார்பாக தங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகலைவன் பேரவை தலைவர் வடிவேல், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன், இடிமுரசு இஸ்மாயில் உள்ளிட்ட பலர் ஐஜி அலுவலகம் வந்திருந்தனர் .