Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது.

0

'- Advertisement -

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு பேச்சு :

 

திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார்

கைது

 

மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் போராட்டம்.

 

திமுக துணைப் பொதுச் செயலாளரும்,

மேல் சபை எம்பியுமான திருச்சி சிவா

பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக

கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரசார்

கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,

திருச்சி சிவா எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி

வழக்கறிஞர் சரவணன் தலைமையில் காமராஜர் பேரவை மாவட்ட தலைவர் சிவாஜி சண்முகம் ,

தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள்

கள்ளத்தெரு குமார் ,வெல்லமண்டி பாலசுப்பிரமணியன், அண்ணா சிலை விக்டர், காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி, சம்சுதீன், மார்க்கெட் மாரியப்பன், தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, நிர்மல் குமார் ,நாச்சி குறிச்சி அருண் பிரசாத்,சண்முகம், சகாயராஜ், சிவகிரி

உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள

வ உ சி சிலை முன்பு திரண்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்றம் அருகாமையில் வக்கீல் சரவணன்,சிவாஜி சண்முகம் உள்ளிட்ட அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

பின்னர் வழக்கறிஞர் சரவணன் கூறும்போது,

பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை. மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர்.

தமிழ்நாடு அரசின் பயனியர் விடுதியில் காமராஜருக்காக ஏசி பொருத்தப்பட்டதாகவும், சாகும் தருவாயில் கருணாநிதியை கையை பிடித்து நீதான் தமிழகத்தின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் எனக் கூறியதாகவும்

உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார். திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும் படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.