மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை எளிய பெண்களை குறி வைத்து நடந்த கிட்னி திருட்டு.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் சித்தார் மருத்துவமனை பற்றி கிட்னியை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் பகிர் புகார் .
நாமக்கல் மாவட்டத்தில் கடன் கஷ்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை கட்டி கிட்னி ஒன்றுக்கு ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த கிட்னி ஏஜென்ட் ஆனந்த் என்பவர் ரூபாய் 10 லட்சம் பேசி ரூ.5 லட்சம் மற்றும் கொடுத்ததாகவும் மீதி 5 லட்சத்தை அவர் ஆட்டையை போட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கிறார் .
திமுக சார்பில் போட்டியிட்ட மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி , திருச்சி சிதார் மருத்துவமனை, தஞ்சாவூரை சேர்ந்த ஒரு மருத்துவமனை என அந்தப் பெண்மணி தெரிவிக்கிறார் .
இந்த கிட்னி திருட்டு குறித்து திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாமக்கல் போலீசார் கிட்னிக்கு விலை பேசிய ஏஜெண்டுகளையும் மருத்துவக் குழுவினர் எப்படி ஆதார் கார்டுகளை மாற்றி கிட்னியை திருடினார்கள் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த திருட்டு சம்பவம் குறித்து நாளை மத்திய அரசின் மருத்துவக் குழு திமுக எம்எல்ஏ கதிரவனின் மருத்துவக் கல்லூரியிலும், நாமக்கல் மருத்துவமனையிலும் . திருச்சி சிதார் மருத்துவமனையிலும் , தஞ்சாவூர் மருத்துவமனையிலும் உள்ளனர் என தெரிய வருகிறது .
ஆளுங்கட்சி ஆதரவுடன் கிட்னி திருட்டில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து மருத்துவ வளாகம் கட்டி வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர் .
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தியிடம் இந்த சம்பவம் குறித்து எப்போது பார்த்தாலும் இது போல் ஏதாவது ஒன்று நடப்பது தான். கிட்னி திருட்டு வழக்கமாக நடப்பது தான் என்பது போல் நாமக்கல் கலெக்டரின் அலட்சிய பதிலால் பொதுமக்கள் அதிருப்தி .