திருச்சியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

நேற்று காலை திருவெறும்பூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது எஸ் ஆர் எம் யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் முருகானந்தம் விஜயகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று திங்கட்கிழமை இரவு ரயில் மூலம் சிதம்பரம் வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை எஸ் ஆர் எம் யூ யூனியன் சார்பில் துணை பொது செயலாளர் வீரசேகரன் எஸ்.ஆர்.எம்.யூ நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஊழியர்களுடன் சிறப்பான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

