தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில்
120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில்
ஐக்கிய ஜனதா தளம் போட்டி
திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி அருண் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது மாநில தலைவர் மணி நந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைமை பொதுச் செயலாளர் ஆர். லட்சுமணன்,
பாராளுமன்ற குழு தலைவர் ராஜகோபால், மாநில பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றார் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் முருகப்பன், ஏ.ஆர்.பார்த்திபன், லயன் டாக்டர் ஏ டி விஸ்வநாத், ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் கட்சியின் மாநில நிர்வாகிகள் அணி தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் ஆர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
2026 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி வாய்ப்புள்ள பெரும்பாலான தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் கூட்டணி அமைந்தால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
பீகாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதன் முதலில் அமல்படுத்திய சாதிவாரி கணக்கெடுப்பை போல தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
தமிழக காவல்துறையின் அதிகார மீறலை தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவு குடோன்கள் கட்டி மழையில் விவசாயிகளின் நெல்மணிகள் வீணாகி நஷ்டம் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் மது ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் தமிழக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சொந்தமான சுமார் 40,000 சதுர அடி
நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பாக திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எஃப் ஐ ஆர் போடாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தமிழக ஐக்கிய ஜனதா தளம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சொத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

