Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .

0

'- Advertisement -

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

 

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்காக நேற்று செவ்வாய்க்கிழமை வந்த அவரை மாநகர திமுக வட்டச் செயலா்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாநகரப் பொறுப்பாளா் நியமனத்தை மாற்ற வேண்டும் அல்லது எங்களின் பதவிகளை பறித்துவிடுங்கள் என முழக்கமிட்டனா். அவா்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு சிரமப்பட்டுதான் அமைச்சா் நேருவால் மேடைக்கு ஏற முடிந்தது. பின்னா் அவா் பேசிய போது கூறியதாவது :-

 

மாநகர திமுக பொறுப்பாளா் நியமனத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்று வரும் எதிா்ப்பு குறித்து திருச்சி வரும் முதல்வா், துணை முதல்வா் ஆகியோருடன் பேசி ஓரிரு நாள்களில் நல்ல முடிவை பெற்றுத் தருவேன். அதேநேரத்தில், இந்தப் பிரச்னைக்காக வட்டச் செயலா்கள் தங்களின் கட்சிப் பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. கடமையைச் செய்துதான் உரிமையைக் கேட்க வேண்டும் என்றாா் நேரு.

 

தனித்தனியே நடைபெற்ற வடக்கு, தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களிலும் நேரு பங்கேற்றுப் பேசினாா்.

 

இந்தக் கூட்டங்களில் தெற்கு மாவட்டச் செயலரும், மாநில இயற்கை வளத் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா் பேசினா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.