நாளை வியாழக்கிழமை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் …
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (10.07.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன்ரோடு, கிழக்கு உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி, வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு சித்திரைவீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரைவீதி, அடையவளஞ்சான் தெருக்கள், திருவானைக்காவல் பகுதி சன்னதிவீதி,
சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார்டன், ராகவேந்திராகார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை ஜம்புகேஸ்வரர்நகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சி இ.பி.ரோடு துணை மின் நிலையம்:
இ.பி.ரோடு, மணிமண்டபசாலை, காந்திமார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத்தெரு, ராணித்தெரு, பூலோகநாதர்கோவில்தெரு, பெரிய சவுராஷ்டிராதெரு, ஜின்னாதெரு, கிருஷ்ணபுரம்ரோடு, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார்தெரு, பட்டவர்த்ரோடு, கீழஆண்டார்வீதி, மலைக்கோட்டை, மேலப்புலிவார்டுரோடு, பாபுரோடு, குறிஞ்சிகல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ்நகர், வேதாத்ரிநகர், ஏ.பி.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை.
கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்கள்:
கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்பமாபுரி, ராஜபாளையம், வலையபட்டி, கோட்டப்பாளையம், சோபனபுரம், காஞ்சேரிமலை, புதூர், ஒடுவம்பட்டி, ஓசரப்பள்ளி டி.மங்கப்பட்டி, புதூர், டி.முருங்கபட்டி, பாதர்பேட்டை வெள்ளாளப்பட்டி, பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவன்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, புதூர், பெரிய சித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், டாப்செங்காட்டுப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், காந்திபுரம், புடலாத்தி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, சூக்கலாம்பட்டி, ஏரிக்காடு, பி.மேட்டூர், கோட்டப்பாளையம், விசுவாம்பாள் சமுத்திரம், தெற்கு வடக்கு உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.