தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ? சாமிதோப்பு அடிகளார் .
அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளி அஜித் குமாரின் குடும்பத்தினரை சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் வழி பாலபிரஜாபதி அடிகளார் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தது நாடார் சமுதாயத்தினர் தமிழகத்தில் வாழ்வதில் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 90 சதவீத நாடார் சமுதாயத்தினர் வாழ்கின்றனர்.
இச்சம்பவத்தால் நாடார் சமுதாயத்தினர் அச்சத்தில் உள்ளனர். நாடார் சமுதாய மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், அமைதி இழந்து வாழ்கின்றனர் என தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
கேரள மாநிலம் திரு விதாங்கூரில் வாழ்ந்த நாடார் சமுதாயத்தினர் தமிழுக்காகவும், முன்னாள் முதல்வர் காமராஜரை நம்பியும் தமிழகத்தோடு போராடி இணைந்தோம். தற்போது எங்கள் சமுதாயத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பார்க்கும்போது பரிகாரங்கள் தேடும் வகையில் மீண்டும் கேரளாவோடு இணைந்துவிடலாமா என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ என்ற உணர்வு ஏற்படுகிறது. கேரளாவின் மறு மலர்ச்சிக்கு வித்திட்ட அய்யா வைகுண்டர்சாமிக்கு புகழ் சேர்க்கும் வகையில் அங்கு மணிமண்டபம் கட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
கேரளா மீது இருக்கும் நம்பிக்கை தமிழகத்தின் மீது ஏற்படவில்லை. எனவே, தமிழக அரசு நாடார் சமுதாயத்தினரின் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பு, நம்பிக் கையை அளிக்க வேண்டும். எனக்கு சாதி கிடையாது. அனைத்து சமுதாயத்தினரும் எனது நண்பர்கள் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.