திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .
திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல், வாந்தி, மயக்கம், போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வரும் இப்பகுதியில், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, அவதிக்குள்ளான மக்களை சந்தித்து ஆறுதல் அளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்கள்,
மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
தற்காலிக நடவடிக்கையாக குடிநீர் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு, இரண்டு நாட்களில் சரி செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
அமமுக மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், காஜாமலை பகுதி செயலாளரும முன்னாள் கவுன்சருமான கதிரவன் , உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் என்.எஸ்.தருண், நிர்வாகிகள் ஸ்டீபன், மகாலட்சுமி, தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.