திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம் .
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார் .
இந்நிலையில் கடந்த 27ந்தேதி மகளை சந்திக்க தமிழ்ச்செல்வன் விடுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மகளை தங்கவேல் செல்போனில் அழைத்து பேச முயன்ற போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.நீண்ட நேரம் ஆகியும் அவர் விடுதிக்கு திரும்பி வராத காரணத்தால் அவரது தந்தை தமிழ்ச்செல்வன் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.