திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). மாவட்ட அதிமுக ஐடி விங்க் இணை செயலாளராக இருந்தார். இவரது தாய் மலர்க்கொடி (வயது 70). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 85). இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் கடந்த 24ம் தேதி மலர்க்கொடி வளர்த்து வரும் ஆடு, மாடு அடிக்கடி மேய்ந்து வந்தது. இதனால் மலர்க்கொடியை முத்துலட்சுமி ஜாடையில் திட்டினார். இதை மலர்கொடி கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆனந்தபாபு முத்துலட்சுமியை தாக்கினார். இதில் தடுமாறி விழுந்து காயமடைந்த முத்துலட்சுமி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தபாபுவையும், மலர்க்கொடியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆனந்தபாபு, மலர்கொடியை போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் ஆனந்தபாபுவையும், திருச்சி பெண்கள் சிறையில் மலர்க்கொடியையும் போலீசார் அடைத்தனர்.