பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற ஒரே வழி இவர் மட்டும்தான் .
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும்.
இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில் அடித்து விட்டது.
இந்த சூழ்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 350 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது. இதுவே 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த போட்டி நடந்திருந்தால் நிச்சயம் இது டிரா என்று ரசிகர்கள் முடிவு எடுத்து இருப்பார்கள்.
ஆனால் இது டி20 காலம் என்பதால் எந்த இலக்கை நிர்ணயித்தாலும் பேட்ஸ்மேன்கள் எட்டி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையே டி20 போல் தான் விளையாடுகிறார்கள். மேலும் ஆடுகளமும் பெரிய அளவு தோய்வு அடையவில்லை. அதே சமயம் முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கும் கை கொடுக்கவில்லை.
இதே மைதானத்தில் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு இங்கிலாந்து விளையாடியது. அப்போது ஸ்டோக்ஸ் அபாரமாக நின்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார். இதே ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி 404 ரன்கள் என்ற இலக்கை வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டிருக்கிறது. ஆனால் அது 1948 ஆம் ஆண்டு நடந்ததாகும்.
2017 ஆம் ஆண்டு இதே ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் என்ற வெற்றி இழக்கை எட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது ஆடுகளும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் 90 ஓவரில் 350 ரன்கள் என்பது நிச்சயம் இங்கிலாந்தால் எடுக்க முடியும்.
ஆனால் இந்திய அணியில் பும்ரா என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் இருக்கிறார். அவர் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வது என்பது கன்னிவெடியை வேண்டுமென்று மிதிப்பதற்கு சமம் ஆகும். இதனால் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடுகிறேன் என முடிவு எடுத்தால் நிச்சயம் அதற்கு பும்ரா வேட்டு வைப்பார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி கிரிக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ், சர்துல் தாக்கூர் ஆகியோர் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை.இது போன்ற ஜடேஜாவும் இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை பந்து வீச்சில் ஏற்படுத்தவில்லை. இதனால் ஐந்தாவது நாள் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.