திருச்சியில் ஆர்.கே ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தவெக தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டுதல்.
திருச்சியில் ஆர்.கே ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தவெக தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டுதல்.
தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தவெக தலைவர் தளபதி விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகமும் செய்து திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தளபதி விஜய் நோய் நொடியில்லாமல் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என வழிபாடு செய்தனர் .
இந்த நிகழ்வில் தொட்டியம் பாரதிராஜா பெரிய மிளகு பாறை சுப்பிரமணி , ஜீவா, உறையூர் சரண்ராஜ் , மண்ணச்சநல்லூர் சுரேஷ், லால்குடி கலைவாணன், லோகு , ரமேஷ், சூர்யா, புத்தூர் நடராஜ், பாபு , மலைக்கோட்டை நசீர், சமயபுரம் ஆஸ்வின் திருவானைக்காவல் பேச்சாளர் கவிஞர் லோகநாதன், சங்கர், பார்த்திபன் பாரதி நவீன் , சுறா சுகுமார் ,மண்ணச்சநல்லூர் கலைவாணன், தொட்டியம் சுஜன், ஹரி ஆலம்தெரு ஷாம், தீபேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.