Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ட்விட்டரில் அவதூறு பரப்பிய TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி எஸ்பியிடம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அதிமுகவினர் புகார்

0

'- Advertisement -

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் BNS Act 2023-ன் கீழ் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B. ராஜா மற்றும் X-தளத்தில் அவதூறு செய்தியை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

 

நான் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகின்றேன்.

 

இந்நிலையில், 17/06/2025 அன்று மாலை 5.57 மணியளவில் X-சமூக வலைதளத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B. ராஜா நிர்வகித்துவரும் திமுகாவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (@DMKITwing) என்ற பக்கத்தில் எங்கள் கட்சியின் பொது செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவரின் கண்ணியத்தையும் மற்றும் அவரின் மாண்பையும் பதவியையும் அருவருக்கத்தக்க கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் மற்றும் ஆபாசமான அரைநிர்வாண கோலத்தில் இருக்கக்கூடிய ஒரு கேலிசித்திரத்தை பொய்யான செய்தியுடன் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

 

மேற்படி அவதூறு பதிவினை கடந்த 17/6/2025 அன்று மாலை 6.10 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றியம், குமாரவாடி என்ற ஊரில் நான் எங்களது அஇஅதிமுக கட்சி நிர்வாகிகளுடன் கட்சி பணி நிமித்தமாக இருந்த போது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

 

இந்த அவதூறான பொய் செய்தி மற்றும் ஆபாச கேலிசித்திரம் எங்கள் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி. பழனிசாமியை அவமதிக்கும் வகையிலும் அவரை பின்பற்றும் கட்சி தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் மற்றும் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது. மேலும், எங்கள் கட்சியின் அடையாளமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றப்பட்டு எங்களது கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் மதிக்கக்கூடிய அதிமுகவின் கட்சி கொடியினை அவமதிக்கும் வகையில், X-சமூக வலைதளத்தில் தவறாக பயன்படுத்தி கேலிசித்திரம் வெளியிட்டுள்ளனர்.

 

இத்தகைய செயல்கள் இரு அரசியல் கட்சி தொண்டர்களிடையே வெறுப்பு மற்றும் மோதல் போக்கை தூண்டும் வகையிலும், அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் வகையிலும் உள்ளது இந்த செயலானது கீழ் கண்ட சட்டங்களின் படி ஒரு தண்டனைக்குறிய குற்றமாகும்.

 

இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ்

 

66E (Punishment for violation of Privacy),

 

67 (Publishing or transmitting obscene material)

 

69A (Blocking offensive content)

 

மற்றும் BNS Act 2023-ன் கீழ்

 

352 (Intentional insult with intent to provoke breach of peace)

 

353(1) (b) (Statements Conducing to Public mischief)

 

356(1) r/w. 356(2) (Defamation)

 

எனவே மேற்கண்ட அவதூறு பதிவுவினை X- சமூக வலைதளத்தில் வெளியிட்ட, திமுக IT-WING மாநில செயலாளர் T.R.B. ராஜா மீதும் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் மேற்கூறிய அவதூறு செய்தி மற்றும் ஆபாச கேலிசித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது .

இந்த நிகழ்வில் அதிமுக தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி. கார்த்தி, ராவணன், பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் , பாஸ்கர், தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி. பாண்டியன், முத்துக்குமார் , சாந்தி, அம்மா பேரவை செயலாளர் சூரியூர் ராஜபணிகண்டன் , சுரேஷ்குமார், சின்னதுரை, சம்பத், எஸ்.பி. கணேசன் , வீரமணி. பிரசன்னா குமார், ரபிக், கோபிநாத், ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

 

இதை ஒன்று திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட சார்பிலும் எஸ்பி இடம் மனு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளருடன் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி , உன்னோட அரசு தலைமை கொறடா மனோகரன் , முன்னாள் எம் எல் ஏ பரமேஸ்வரி , ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோப்பு நடராஜ், அறிவழகன் , பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி , பாக செயலாளர் வி என் ஆர் செல்வம், சமயபுரம் ராமு , புங்கனூர் கார்த்தி , வழக்கறிஞர் தேவா, மாவட்ட செயலாளரின் உதவியாளர் ஆனந்த் . பாசறை சோனா விவேக் , தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.