திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் 3-வது நாள் உயிரிழப்பு . குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.
திருச்சி புத்தூர் ஜெனட் மகப்பேறு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் 3-வது நாள் சாவு : குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.
மன்னார்குடியை சேர்ந்தவரின் பெண் குழந்தை பிணம் தோண்டி எடுப்பு.
திருச்சியில் தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை.
சுக பிரசவத்தில்
பிறந்த பச்சிளம் குழந்தை மறுநாளே உயிரிழப்பு
மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த
புகாரின் அடிப்படையில் தாசில்தார் முன்னிலையில் இறந்த குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் பிரவீன் ராஜ் . இவருக்கும், திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த ராதிகாவு
க்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் ராதிகா கர்ப்பம் தரித்து புலிவலத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்து திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த 19-ந் தேதி மாலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 20-ந் தேதி காலை ராதிகாவிற்கு சுகபிரசவத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் 2650 கிராம் எடையுடன்
பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை 24 மணி நேரமும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் கண்காணிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தைக்கு பால் பவுடரை கலக்கி சங்கில் கொடுக்க சொல்லி செவிலியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனே செவிலியர்களிடம் தெரிவித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை நிர்வாகம் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 21-ந் தேதி சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது.
உடனே மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக குழந்தையை எடுத்துச் சென்று எரித்து விடுங்கள் என தெரிவித்து உள்ளனர். ஆனால் பெற்றோர் குழந்தையை காவிரி கரையோரம் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.
குழந்தையின் உடலை எரிக்க சொன்னதின் பின்னணி என்ன ? இந்த நிலையில் ஜெனட் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இறந்த குழந்தையின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் அந்த ஜெனட் மகப் மருத்துவமனை மீது சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.
மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்தால் உண்மை தன்மை தெரிய வரும் புகார் அளித்தனர். இதன் பேரில் கிழக்கு தாசில்தார் சக்திவேல் முருகன் தலைமையில் இரண்டு அரசு மருத்துவர்கள், காவல்ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஓயாமரி சுடுகாட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் நேற்று காலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
36 வாரத்தில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தாலும் 24 மணி நேரமும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் ஆனால் மருத்துவர்கள் கண்காணிக்காமல் அலட்சியத்தால் இருந்ததால் தான் எனது குழந்தை இறந்து விட்டது இதற்கு முழு காரணம் தனியார் மருத்துவமனை மருத்துவர் விக்டோரியா, இரவு நேர மருத்துவர் மற்றும் சங்கில் பால் பவுடர் கலந்து கொடுத்த நர்ஸ் சாரா தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க இறந்த குழந்தையின் தாய் ராதிகா தெரிவித்தார்.
இதுகுறித்து சிகிச்சை அளித்த ஜெனட் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தொலைபேசி வாயிலாக கூறும்போது :-
சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தது.
அதற்கு முறையான சிகிச்சை அளித்தோம்.
ஆனாலும் குழந்தை இறந்து விட்டது.
குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளோம்.பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தை இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறி உள்ளார்.