தாலிக்கு தங்கம் , ஆடு மாடுகள் , மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் போன்ற நல்ல திட்டங்களை நிறுத்திய திமுகவுக்கா உங்கள் ஓட்டு ? முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் .
திருச்சி மாவட்டம் வளநாடு கைகாட்டியில் நடந்த தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலகம் உண்ணா சட்டமன்ற உறுப்பினருமான சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். இதில் 3000க்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய விஜயபாஸ்கர்: விடியா மாடல் முதல்வர் ஸ்டாலின் நமது ஆட்சியில் கொடுத்த அனைத்து முத்தான திட்டத்தையும் முடித்து வைத்தார். இவருக்கா ? உங்கள் ஓட்டு என சிந்தித்து வாக்களியுங்கள். படுத்து கொண்டே தானும் ஜெயித்து 200 தொகுதிகளுக்கும் மேல் வென்றெடுத்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
அவரை தொடர்ந்து பல மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து அனைவரையும் எம்பிபிஎஸ் ஆக செய்து அழகு பார்த்தவர் எடப்பாடியார். மேகம் கருக்கும் சூரியன் மறைக்கும் இலை தளிர்க்கும் நமது ஆட்சி வர வேண்டும் என மக்கள் எதிர்பார்கிறார்கள். அடுத்த மே மாதம் ஆட்சி அமையும் இதே மேடையில் நாம் வேற லெவலில் உட்கார்ந்திருப்போம். இன்னும் 10 மாதத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் இது உறுதி. அம்மா அரை பவுன் தங்கம் கொடுத்தார்கள் எடப்பாடியார் ஒரு பவுன் கொடுத்தார்கள் ஸ்டாலின் என்ன கொடுத்தார்?
மகளிர் தொகை பலருக்கு கிடைக்கவில்லை நாம் வந்தவுடன் சேர்த்து கொடுப்போம். கரூர் தொகுதிக்குட்பட்ட இந்த மணப்பாறை தொகுதி எம்.பி. ஜோதிமணி என்ன செய்தார். வெறும் விளம்பரத்தை மட்டும் விரும்புபவர் தான் எம்.பி. ஜோதிமணி வாக்குக்கு நன்றி செலுத்த கூட அவர் வரவில்லை . திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து, இலவச மடிக்கணினி திட்டம் ரத்து, இலவச ஆடு,மாடுகள் திட்டம் ரத்து, அம்மா உணவகங்கள் செயல்படுவதே இல்லை காவேரி குண்டாறு வைகை திட்டத்தை நிறுத்தி வைத்து அழகு பார்க்கின்றனர்.
எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் நிறைவேறும் மணப்பாறைக்கு ஆறும் நீரும் வந்து சேரும் இது உறுதி. சாகா வரம் பெற்ற கட்சி இரட்டை இலை சாகா வரம் பெற்ற சின்னம் இரட்டை இலை சின்னம் எனவே அனைவரும் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு செலுத்துங்கள் என கூறினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சலவை இயந்திரம், நிதி உதவி, வேட்டி சேலை என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .