திருச்சி கொண்டையம் பேட்டையில் மதுபான பாரில் தண்ணீர் பாட்டிலை எடுத்ததற்கு பயங்கர மோதல் – மண்டை உடைப்பு
திருச்சி கொண்டையம் பேட்டையில்
மதுபான பாரில் பயங்கர மோதல் – மண்டை உடைப்பு
வாலிபர் கைது – 2 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55).இவர் சம்பவத்தன்று திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு மது அருந்த சென்றார்.இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், குருமூர்த்தி, பரணி ஆகிய மூன்று பேர் அந்த பாருக்கு மது அருந்த வந்தனர்.அப்போது செல்வராஜ் மற்றும் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துக் கொண்டிருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் மோதலாக உருவாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலால் செல்வராசை தாக்கினர்.இதில் செல்வராஜின் மண்டை உடைந்து,பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரி அடிப்படையில் பிரசாந்தை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய குருமூர்த்தி, பரணி ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.