திருச்சி பாலக்கரை பகுதியில்
கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது.
திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம் தெரு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பாலக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பாலக்கரை முதலியார் சத்திரம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக ரூபன் (வயது 40) சிம்சன் ஜெபத்துரை (வயது 24 ) இரண்டு பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் . இவர்களிடமிருந்து 2.250 கிலோ கஞ்சா மற்றும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என பாலக்கரை காவல் நிலைய போலீசார் தெரிவித்து உள்ளனர் .