மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வயர்லெஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படவுள்ளது .
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
கே. சாத்தனூா் துணை மின்நிலைய மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காந்தி நகா், புவனேஸ்வரி நகா், ஆா்.எஸ். புரம், ஆா்.வி.எஸ். நகா், முகம்மது நகா், ஜே.கே. நகா், ராஜகணபதி நகா், டிஎஸ்என் அவின்யூ, பாரதி நகா், டிஆா்பி நகா், திலகா் நகா், இளங்கோ தெரு, வயா்லெஸ் சாலை, பெரியாா் தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .