மாணவ, மாணவிகள் நல்ல துறையை தேர்வு செய்து சாதித்துக் காட்ட வேண்டும். திருச்சி திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
மாணவ, மாணவிகள் நல்ல துறையை தேர்வு செய்து சாதித்துக் காட்ட வேண்டும்
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும்
கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
திருச்சி – தஞ்சை சாலையில் அமைந்துள்ள தனரெத்தினம் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் தலைவர் யு.எஸ்.கருப்பையா தலைமை தாங்கினார்.
அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும்,திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் செயலாளருமான,
எம்.கே.எம் காதர் மைதீன் வரவேற்றார்.
விழாவில்
கல்வி ஊக்கத்தொகையாக 60 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கி
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
விழாவில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு,
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , திருச்சி
மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில்
மார்க்கெட் பகுதி திமுக செயலாளர் ஆர் ஜி பாபு,
ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம்,சங்க ஆலோசகர்கள் பி.கே.எஸ் அப்துல் மலிக் கே.டி.தங்கராஜ்,
மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள்,சங்க அலுவலர் கே.நாராயணன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்துகொண்டனர் .
விழாவை பொருளாளர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்தார்.
விழாவில் மாணவ, மாணவிகளை வாழ்த்தி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் அதிக மதிப்பெண் பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ பத்தாயிரம் (Rs. 10,000. ) கல்வி உதவித்தொகை வழங்க முன் வந்து, பத்து லட்சம் வரை செலவு செய்துள்ளார். அவரும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர் .பணம் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். கொடுக்க
மனம் வேண்டும்.
அந்த மனம் படைத்தவர் எம்.கே .எம்.காதர் மைதீன். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
மற்ற துறைக்கும் கல்வி துறைக்கும் உள்ள வேறுபாடு என்று பார்த்தால் எங்களுடைய துறைக்கு ஒரு அரசாங்கம் வெறும் முதலீட்டை மட்டும் தான் செய்து கொண்டிருக்கும். மற்ற துறைக்கு முதலீடு செய்தால் அந்தத் துறையில் அந்த முதலீட்டை எடுத்து விட முடியும் .ஆனால் அது மன அமைதியால் முடியாது. ஒரு நல்ல சமுதாயத்தில் ஒரு வட்டியை திருப்பித் தர முடியும் என்றால் யார் மீது முதலீடு செய்கிறோம் என்றால் இங்கு அமர்ந்திருக்கின்ற மாணவச் செல்வங்கள் மீதுதான் . ஆகவே எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவராக, மருத்துவராக, இன்ஜினியராக வரவேண்டும் என்று அந்த எண்ணத்தில் செயல்படுகின்ற துறை தான் பள்ளிக்கல்வித்துறை . நாங்கள் அமைச்சராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இன்றைக்கு வரும். நாளைக்கு போகும். ஆனால் நாங்கள் படித்த படிப்பு தான் இறுதிவரை எங்கள் கூடவே வரும் . இங்கு வருகை புரிந்திருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களது கடைகளை வைத்துக்கொண்டு தங்களது சக்திக்கு மீறி தாங்கள் வியாபாரம் செய்து கொண்டு மாணவர்களாகிய பிள்ளைகள் உங்களுக்கு நேரத்தை ஒதுக்கி இங்கு வந்திருக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு வகையான தியாகம் தான். நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை மறந்து விடக்கூடாது. எனக்கு இந்தத் துறை பிடித்திருக்கிறது. நான் இந்த துறையில் சாதிப்பேன் என்று தேர்வு செய்து மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் அந்தந்த துறையில் படிக்க வேண்டும் . பெற்றோர்களாகிய நீங்கள் அதற்கு முழுவதுமாக உறுதுணையாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் கஷ்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அது மாணவச் செல்வங்களாகிய உங்களால் தான் முடியும். அதற்கு நீங்கள் நன்றாக படியுங்கள் . அவ்வாறு படித்தால் பெரிய படிப்பு படித்து பெரிய வேலைக்கு நீங்கள் சென்று பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். படிப்புக்கு தடையாக எது வந்தாலும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறும் முதல்வரை தான் நாம் பெற்று இருக்கிறோம். இந்த காந்தி மார்க்கெட் வியாபார சங்கத்திற்கு இதுபோல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர்களை வாழ்த்துகிறேன்.
‘ கே எம். காதர் மைதீன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த கல்வி ஊக்கத்தொகை வருடந்தோரும் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் வருகை புரிந்திருந்த அனைவருக்கும் அசைவ உணவு விருது வழங்கப்பட்டது .