திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை கபசுர குடிநீர் வழங்கப்படும் . வழக்கறிஞர் வெங்கட்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி திங்கட்கிழமை 19/05/2025 குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மாண்புமிகு நீதிமன்ற நடுவர்கள் தலைமையேற்று கபசுர குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கும் நிகழ்வை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தொடங்கி வைத்தனர் அதன் தொடர்ச்சியாக
வரும் 30 /5 /2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கப்படும் அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார் .