திருச்சியில் டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கே.கே.நகர் பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தி முனையில் இவரை மிரட்டி பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த
புகாரின் பெயரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கே.கே.நகர்
கே. சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்ற வாலிபரை கைது செய்தனர் .அவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து பணம், கத்தி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.