Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின்தடை .

0

'- Advertisement -

திருச்சி தென்னூர் துணை மின் பாதைகளில் நாளை வியாழக்கிழமை மே 22 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

 

இதன் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின் தடை பகுதிகள் விபரம் வருமாறு :

 

திருச்சி தென்னூர் துணைமின் நிலையத்தைச் சேர்ந்த தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹை ரோடு, அண்ணாநகர் கிழக்கு, மேற்கு பகுதிகள், புது மாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ராக்மானியபுரம், சேஷாபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர் ஆகிய இடங்கள்.

 

அதே போன்று , நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேல புலிவார ரோடு  ஜாலல், பக்கிரி தெரு, ஜாலர் குதிரை தெரு, குப்பங்குளம்,ஜாபர் தெரு, பெரிய கடைவீதி, சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார்தெரு, சுண்ணாம்புக்கார தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிழதார் தெரு, சப் ஜெயில் ரோடு, பாரதிநகர், இதயா நகர், காயிதே மில்லத் சாலை.பெரிய செட்டி தெரு, சின்ன செட்டி தெரு, பெரியகாமாலதெரு, சின்னகாமால தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபீஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல் மந்தை, கூனி பஜார் ஆகிய இடங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது .

 

மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.