பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு.
திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனைக்கிணங்க.
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 வது சதய விழாவினை முன்னிட்டு..
வருகின்ற 23.5.2025 வெள்ளிக்கிழமை,காலை 10.00 மணி அளவில்
திருச்சி கன்டோன்மென்ட், ஒத்தக்கடை ரவுண்டானாவில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது..
அது சமயம் அதிமுகவில் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார் .