திருச்சி தென்னூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம் இன்று நடைபெற்றது .
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம்
திருச்சி தென்னூரில் இன்று நடைபெற்றது .
மின்சார தொழிலாளர்கள்பங்கேற்கும் மே-20 வேலை நிறுத்தம் – மறியல் குறித்து 17 அம்ச கோரிக்கைகள் விளக்க வாயிற்கூட்டம மின்வாரிய நகரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு. நடைபெற்றது. மின்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்,
மின்சார வினியோகம் முற்றிலும் தனியார்மயமாக்க வழிவகை செய்திடும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவேண்டும்,
புதிய சிபிஎஸ் பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டம் அமுல்படுத்திடுவது உட்பட 17 அம்ச கோரிக்கைகள் விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பாக நடைபெற்ற வாயிற்கூட்டத்திற்கு தொ.மு.ச . வட்ட செயலாளர் தியாகராஜன். தலைமை தாங்கினார் .
சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் எஸ்.ரெங்கராஜன்,
பெடரேஷன் தலைவர் சிவ செல்வம். ஐக்கிய சங்கம் ஆலய மணி. ஆரோக்கியசாமி, எல். பி.எப்-இளங்கோ
சி.ஐ.டி.யு. பழனியாண்டி, நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.
இந்தக் கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.