Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழி தோண்டி மறைத்து வைத்திருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டை மூட்டையாக பறிமுதல் .

0

'- Advertisement -

இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடைபெற்று வருவது வாடிக்கை.

 

இந்நிலையில் ராமேஸ்வரம் கடற்கரையில் பார்சல் ஒன்று இருந்தது. அதன் மதிப்பு மற்றும் அந்த பொருள் என்ன என்பதை பார்ப்போம்.

 

இலங்கை ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வெறும் 29 கிலோ மீட்டர் தான். 29 கிலோ மீட்டர் கடலில் படகில் பயணித்தால் எளிதாக இலங்கைக்கு போய்விட முடியும். இதன்காரணமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை, மருந்து பொருட்கள், மஞ்சள், ஏலக்காய், கஞ்சா, கடல் அட்டை, போதைப்பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. இதேபோல் இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடக்கின்றன. இவற்றை கண்டுபிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் .

 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி நடப்பதாக சென்னையில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

 

இதைதொடர்ந்து வேதாளை கடற்கரைக்கு போலீசார் விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே வேதாளை செல்லும் வழியில் இடையர்வலசை ரயில்வே கேட் பகுதியில் கடற்கரை அருகே மர்மமான முறையில் ஒரு குழியை தோண்டி, பின்னர் மூடி வைத்திருந்தது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

 

எனவே அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த இடத்தில் மீண்டும் தோண்டினர். அப்போது, பார்சல், பார்சலாக அந்த குழியில் இருந்து வெளிவந்தது. அந்த குழியை மீண்டும் முழுவதுமாக தோண்டியதில் மொத்தம் 88 பார்சல்கள் மீட்டு எடுக்கப்பட்டன. அவற்றை சோதித்தபோது அவை அனைத்தும் கஞ்சா பார்சல்கள் என தெரியவந்தது.

 

ஒவ்வொரு பார்சலிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 176 கிலோ கஞ்சா பிடிபட்டு உள்ளது. இந்த கஞ்சா பார்சல்களை கடத்தி வந்து கடற்கரை அருகே மணலில் புதைத்தது யார்? என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுகுறித்து வேதாளை பகுதியை சேர்ந்த சத்தீசுவரன், காமேஷ், கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

3 பேரிடம் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா பார்சல்களை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. மீட்கப்பட்டுள்ள கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.