எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 71 கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் அனைவரும் திரளாக பங்கேற்க மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் நாளை மே 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது .
பொதுச் செயலாளரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .
பின்னர் திருச்சி பாலக்கரை மீனாட்சி கல்யாண மண்டபத்தில் எம்ஜிஆர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
முன்னதாக அன்றைய தினம் மலைக்கோட்டைசித்தரை தேர் திருவிழாவை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து தேர் வடம் பிடித்து இழுத்தார் .
இந்த நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகிகள் ஜாக்குலின், கருமண்டபம் பத்மநாதன், வனிதா , இளைஞர் அணி ரஜினிகாந்த் , சகாபுதீன் , வழக்கறிஞர் ராஜேந்திரன் ஐடி பிரிவு வெங்கட் பிரபு, அண்ணா தொழிற்சங்க ராஜேந்திரன் , பகுதி செயலாளர்கள் அன்பழகன் , வாசுதேவன், ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, கலைவாணன். ரோஜர், ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்திரன் , வாழைக்காய் மண்டி சுரேஷ் , டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ. டி எஸ் எம் செல்வமணி , எஸ் எம் டி மணிகண்டன், ஒத்தக்கடை மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
இந்த நிலையில் நாளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகரில் உள்ள 71 கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது என திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .
இந்த நிகழ்வுகளில் திருச்சி மாநகர மாவட்ட பகுதி செயலாளர்கள் , அணி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .