எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெடுங்களநாதர் கோயிலில் அம்மா பேரவை சார்பில் அன்னதானம் வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் .
அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டஅருள்மிகு ஶ்ரீ திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
இவ்விழாவுக்கு வருகை தந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் துவக்கி வைத்து அன்னதானம் வழங்கினார் .
விழாவை ஏற்பாடு செய்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா மணிகண்டன் மற்றும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் S.K.D.கார்த்திக், திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் மாவட்ட துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார், மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் கிளைக் செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.