திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில்
வீட்டு உரிமையாளரை தாக்கிய

கணவன் மனைவி .
போலீசார் கைது செய்து விசாரணை.
திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 41). இவருக்கு செங்குளம் காலனியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த கார்த்தி (வயது 32) என்பவருக்கு அந்த வீட்டினை 3 வருடத்திற்கு மாத வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திக் கடந்த ஆறு மாதமாக வாடகை பாக்கி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதுரை வீட்டிற்கு சென்று வாடகை பாக்கி கேட்டு உள்ளார் அப்பொழுது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திக் தங்கதுரையை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக் (வயது 32) மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி (வயது 30 )ஆகிய இருவரை கைது செய்தனர்.மேலும் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.