திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க மீண்டும் மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ள 2000 கோடி சுருட்டிய குடுமியான்மலை ரவிச்சந்திரன்.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது , அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . இது திருடாதே படத்தில் வரும் பாடல் வரிகள் .
தற்போது இதே போன்று விதவிதமாக திட்டம் போட்டு மக்களை ஏமாற்றி பல கோடி சுருட்டிய குடுமியான்மலை ரவிச்சந்திரன் மீண்டும் பொதுமக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளதை பற்றி தெரிந்து கொள்வோம் .
‘ஒரு லட்சம் ரூபாய் கொடு ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ – இது புதுக்கோட்டை மாவட்டத்தில் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நடத்திய ரவிச்சந்திரனின் தாரக மந்திரச் சொல். இந்த சொல்லை நம்பி அவரிடம் ஏமாந்தவர்கள் 700க்கும் மேற்பட்ட நபர்கள் . கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி ஏப்பமிட்ட ரவிச்சந்திரனை, கடந்த 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரோடு எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி உரிமையான்மலை ரவிச்சந்திரனை கைது செய்தார். காவல்துறையின் விசாரணையில் ரவிச்சந்திரனின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகியது
அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் தன்ராஜ் அப்போது கூறியிருந்தது , ஈரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ரவிச்சந்திரனிடம் 3 கோடி ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி ரவிச்சந்திரன், அன்சர்கான், தேவராஜன், அகஸ்டின் லியோ, சுந்தர் ஆகிய 5 பேர் அப்போது கைது செய்யப்பட்டு இருந்தனர் . மோகன்ராஜ் மட்டுமல்ல பலரை ரவிச்சந்திரன் அன்கோ ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ரவிச்சந்திரன், அகஸ்டின் லியோ, சுந்தர் ஆகிய மூன்று பேரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் பல தகவல்கள் வெளியாகின .
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையை சேர்ந்த ரவிச்சந்திரன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். பி.ஏ வரை படித்துள்ளான். எல்லோரிடமும் அன்பாக பேசுவான். அவனது பேச்சு பலருக்குப் பிடித்தது. ஆடம்பரமாக வாழ நினைத்த ரவிச்சந்திரனுக்கு பணம் ஒரு தடையாக இருந்தது. அதை குறுகிய காலத்தில் சம்பாதிக்க திட்டமிட்டான். தனக்கு வெளிநாட்டு லாட்டரியில் கோடிக்கணக்கான பணம் விழுந்துள்ளது. அதை வாங்க சில லட்சங்கள் கொடுக்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் நம்புவதற்காக தன்னுடைய செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சை காண்பிப்பது ரவிச்சந்திரனின் வழக்கம். ‘நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் அதை உங்களுக்கு 5 மடங்காக தருவேன்’ என்று கூறுவான். எஸ்.எம்.எஸ் மற்றும் ரவிச்சந்திரனின் பேச்சை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இருக்கிறார்கள். மோகன்ராஜை தவிர 2015 ல் யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால் அவனிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர்? எவ்வளவு தொகை? என்ற விவரம் அப்போது வெளிவர இல்லை .
மக்கள் நம்புவதற்காக நடிகைகள் சிநேகா, நமிதா, நடிகர்கள் ராதாரவி, வடிவேலு, தாமு உள்ளிட்டவர்களை அழைத்து வந்து நலத்திட்ட உதவிகள் செய்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். இதனால் ரவிச்சந்திரனை எல்லோரும் முழுமையாக நம்பி அவனிடம் பணத்தை கொடுத்துள்ளனர்” என்றார் .
ரவிச்சந்திரன் குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் மயக்கம் செய்ய வைக்கிறது.
“புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘பெரிய மனிதர்’, ‘எட்டாவது கொடை வள்ளல்’, ஆன்மீக ரத்னா, லயன் என்ற பெயர்களில் வலம் வந்த ரவிச்சந்திரன் சறுக்கியதற்கு முக்கியக்காரணம் ஆடம்பர வாழ்க்கையே என்று சொல்லப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு தன்னுடைய தாத்தா பெயரான சவரிமுத்துவையும், தந்தை பெயரான அருள்தாஸையும் சேர்த்து சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையை செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கினார். அறக்கட்டளையின் அறங்காவலரான ரவிச்சந்திரனுக்கு அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த 2010ல் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.( பணம் கொடுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது)
ஜோதிடத்திலும், வரலாறு பாடப்பிரிவிலும் இளங்கலை படித்துள்ளார்.
ரவிச்சந்திரன் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுக்க முடியவில்லை. கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்தன. பணம் கொடுத்து ஏமாந்த பலர் ரவிச்சந்திரனிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார்கள். ஆனால் அதை எதையும் ரவிச்சந்திரன் தரப்பு கண்டுக்கொள்ளவில்லை. அதோடு ரவிச்சந்திரனிடம் ஏமாந்தவர்கள் பலர், கறுப்பு பணத்தையே அவனிடம் கொடுத்துள்ளார்கள். இதனால் அவர்களால் காவல்துறையில் புகார் கொடுக்க முடியவில்லை. இது ரவிச்சந்திரன் தரப்புக்கு சாதகமாகி விட்டது.
ஆடம்பர வாழ்க்கையோடு, விளம்பரப் பிரியராகவும் வலம்வந்த ரவிச்சந்திரன், கோயில் திருவிழா தொடங்கி அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்து அமர்க்களப்படுத்தி வந்துள்ளார். ஒரு கோயில் விழாவுக்கு 1001 ரூபாய் நன்கொடையாக கொடுத்தாலும், அதற்கு பல ஆயிரங்கள் செலவழித்து பேனர் வைப்பது ரவிச்சந்திரன் தரப்பு ஸ்டைலாக இருந்து வந்துள்ளது.
‘நாடோடிகள்’ படத்தில் பேனர் வைத்து பந்தா காட்டுவதைப் போல ரவிச்சந்திரனும் விளம்பரப் பிரியராகவே இருந்துள்ளார். நடிகைகள் சினேகா, நமிதா நடிகர்கள் ராதாரவி, வடிவேலு, சார்லி உள்ளிட்டவர்களை அழைத்து நலத்திட்ட விழாவை நடத்தி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்” என சொல்கிறார்கள்.

நடிகர், நடிகர்களை அழைத்து நடத்திய விழாவில் நடிகர் வடிவேல், “இப்படி தர்ம சிந்தனை படைத்தவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது’’ என்றதோடு, ரவிச்சந்திரனை வாழ்த்தி ‘தர்மம் தலைகாக்கும்.. தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்ற பாடலைத் தனது பாணியில் பாடி இருக்கிறார்.
நடிகை சினேகா, “முதல்ல ஜோசியரை யாருன்னே எனக்குத் தெரியாது. அழைப்பிதழ் கொடுக்க வந்தப்பதான் அவரோட தாராளத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். நானே அவருக்கு ஃபேனாகிவிட்டேன்” என்று ரவிச்சந்திரனை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் நிறைவாக மைக் பிடித்த ஜோதிடர் ரவிச்சந்திரன், “என்னோட வளர்ச்சிக்கே காரணமா இருப்பது சினேகாதான். அவங்க படத்தைப் போட்டு ஜோசியத்தை ஆரம்பிச்சேன். அவங்களால அமோகமா வளர்ந்திருக்கேன். நான்தான் அவங்களுக்கு ஃபேன். எனது லட்ச ரூபாய்க்கு ஒருகோடி ரூபாய்த் திட்டத்தை லோக்கல் ஆளுங்கதான் நம்பாம திட்டறாங்க. ஆனா வெளியூர்க்காரங்க என்னை ரொம்ப நம்பறாங்க. எனது இந்த சேவை எப்போதும் தொடரும்” என்று கூறியுள்ளார்.
(நடிகை சினேகா நமீதா டிவி நடிகை நீலிமா ராணி போன்றவர்களை புத்தக வெளியீடு என அழைத்து பல கோடி ரூபாய் கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது)
மணப்பாறை மஞ்சம்பட்டியில் நடந்த விழாவில் நடிகர் ராதாரவி, ரவிச்சந்திரனை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த விழாவில் பெற்றோர்களை மதித்தவர்கள் வாழ்க்கையில் வீணாகுவதில்லை என்று பேசியதுடன் ரவிச்சந்திரனின் தாயாரிடமும் ஆசி பெற்றார்.
நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பவுன்சர்கள் பாதுகாப்புடன் தன்னை பெரிய மனிதனாக காட்டிக் கொண்டு வலம் வருவார். கைகளில் பிரேஸ்லெட் , எட்டு விரல்களில் மோதிரம் என்ன பந்தா கட்டிய உண்மையான ரவிச்சந்திரன் அவ்வப்போது அடுத்த மாதம் பணம்வரும், மூன்று மாதத்தில் அனைவருக்கும் பணம் கிடைக்கும் என அடிக்கடி கூறி வருவார் .
கடைசியாக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மணப்பாறையில் பிரமாண்ட மகன் நிகழ்ச்சி நடத்தி வெளிநாட்டில் இருந்து பணம் வந்து விட்டது அனைவருக்கும் 70க்கும் மேற்பட்டுள்ள ஏஜெண்டுகள் மூலம் 70 ஆயிரம் பேருக்கும் பணம் வழங்கப்படும் என கூறினார் . ஆனால் இதுவரை யாருக்கும் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை .
இந்த நிலையில் தற்போது இந்த மாதம் பத்தாம் தேதி தினசரி காலை மற்றும் மாலை பத்திரிகைகளில் ஒரு பக்க விளம்பரம் வெளியிட்டு இருந்தார் அதில் தடை கற்களை படிக்கற்களாகி 15 வருட போராட்டத்தினை வெற்றியாக்கி வீரனடை போடும் தலைமகனே , சரித்திர நாயகனே என்ற என்ற பில்டப்புடன் மதுரையில் வெற்றி விழா கொண்டாட்டம் என விளம்பரம் வெளியிட்டு இருந்தனர்.
இதில் 7000 குடும்பங்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது ஆனால் எந்த தேதி . எந்த இடம் என எந்த விபரமும் இல்லாமல் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது .
இந்த விளம்பரத்தை பார்த்த கரூர் நபர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு ரவிச்சந்திரனை நம்பி கரூர் அன்பு செழியன் என்ற முகவர் மூலம் நான் பல லட்சம் ஏமாந்து உள்ளேன். தற்போது முன்னணி பத்திரிகைகளில் தேதி இடம் குறிப்பிடாமல் விளம்பரம் வெளியிட்டு மீண்டும் பல கோடி ரூபாய் சுருட்ட களமிறங்கி இருக்கிறான் குடுமியான்மலை ரவிச்சந்திரன் என மிகக் காட்டமாக பேசினார் . நீங்கள் ஒரு செய்தி வெளியிட்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே ஈரோட்டில் 2019 ல் குடுமியான்மலை ரவிச்சந்திரன் 2000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை சுருட்டி உள்ளதாக புகார் உள்ளது . இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டில் இருந்து பணம் வந்துவிட்டது என சில போர்ஜரி பேப்பர்களை காட்டி ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி என விளம்பரம் செய்து பொதுமக்களை மீண்டும் ஏமாற்ற தொடங்கி விட்டான் .
திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தற்போது இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார் . ரவிச்சந்திரன் மீதும் தகுந்த விசாரணை மேற்கொண்டு அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் யாரும் இனிமேல் இவனிடம் ஏமாற மாட்டார்கள் என்பதே இதுவரை இவனிடம் ஏமாந்த 7000 குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு ஆகும்