14 வது வார்டு பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து நாங்களே பல்புகளை மாற்றிக் கொள்கிறோம் மிகுந்த மனவேதனையுடன் கவுன்சிலர் அரவிந்தன்
14 வது வார்டில் தெரு மின்விளக்குகள் கேட்டு கடந்த ஆறு மாதமாக நான்கு முறை மாமன்ற கூட்டத்தில் பேசியும் எந்த பயனும் இல்லை . அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன்.
திருச்சி 14வது வார்டில் உள்ள கிலதார் தெரு என்.எஸ். மண்டபம் 60 அடி ரோட்டில் 20 வாட்ஸ் பல்புகள் தான் உள்ளது. தீபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க என்.எஸ்.பி ரோட்டை கைலாஷ் உடன் மூடி விடுவார்கள் . இதனால் வாகனங்கள் அனைத்தும் இந்த ரோட்டில் தான் வர வேண்டும் . வெளிச்சம் கம்மியாக உள்ள விளக்குகள் எரிவதால் அடிக்கடி செயின் பறிப்பு , கத்தியை கட்டி மிரட்டுவது , பெண்களை கேலி கிண்டல் செய்வது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது . இதனால் இப்பகுதியில் உள்ள 20 பார்ட்ஸ் பல்புகளை மாற்றி 90 வாட்ஸ் பல்புகளை மாற்ற வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நான்கு முறையும் , ஸ்ரீரங்கம் மண்டல கூட்டத்தில் பத்து முறை பேசியும் இதுவரை எந்த பயனும் இல்லை .
கடந்த ஆறு மாத காலமாக எப்போது கேட்டாலும் 90 வாட்ஸ் பல்பு இல்லை என கூறப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி எலக்ட்ரிக்கல் செக்ஷனின் பைல் பிட் அப் பண்ணி ஆணையர் டேபிளில் உள்ளது என்ற ஒரே பதிலை கூறி வருகிறார்கள் .
திருச்சியின் முக்கிய பகுதியான என் எஸ் பி ரோடு கிலதார் தெருவில் 60 அடி ரோட்டில் 20 வாட்ஸ் பல்பா?
14வது பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்று ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர் .
இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்
மாநகராட்சியில் 90 வாட்ஸ் பல்பு வாங்க நிதியில்லை என 14 வது வார்டு பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து நாங்களே பல்புகளை மாற்றிக் கொள்கிறோம் என மிகுந்த மனவேதனையுடன் கவுன்சிலர் அரவிந்தன் தெரிவித்துள்ளார் .