வரும் தேர்தலில் கிழக்குத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
2026 சட்டமன்ற தேர்தலில்
திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை
தொகுதியை ஒதுக்க வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நடைபெறவுள்ள 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே. எம். கே. ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட துணைத் தலைவரும், திருச்சி நத்தர்வலி தர்கா தலைமை அறங்காவலருமான முஹமது கவுஸ் தொடங்கி வைத்தார். திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் வரவேற்றார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டு பெற வேண்டும். ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வருகின்ற மே 9 – ந்தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ளது. பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று மத வழிபாட்டு தலங்களுக்கு இடம் ஒதுக்கி அவரவர் தங்களது மத வழிபாட்டு கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் தரைக்கடை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை ஒழுங்கு படுத்தி கடைகள் அமைக்க இடம் ஒதுக்கி போக்குவரத்து நெரிசலை சீராக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களின் அடிப்படை தேவைகளான கழிப்பிட வசதி, இருக்கை வசதி, குடிநீர் வசதி என எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை முறையான அணுகு சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைச் செயலாளர் வி. எம். பாரூக், விவசாய அணி தலைவர் அப்துல் ஹாதி, மாநில செயலாளர் பஷீர், மாநில மகளிர் அணி செயலாளர் பேராசிரியை பைரோஸ், தெற்கு மாவட்ட தலைவர் கே. எம். கே. ஹபீபுர் ரஹ்மான், செயலாளர் ஜி. எச். சையது ஹக்கீம், பொருளாளர் பி. எம். ஹுமாயூன், துணைத் தலைவர் மவ்லவி எஸ். ஏ. எஸ். உமர் பாரூக் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், பொருளாளர் லியாகத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.