நகராட்சியாக இருந்த போது கூட குடிநீர் விநியோகம் தினமும் ஆறு மணி நேரம் கிடைத்தது. மாநகராட்சியாக ஆன பின் 2 மணி நேரம் கூட குடிநீர் வழங்காத திருச்சி மாநகராட்சி, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் ரமணா .
தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மக்களின் வரிப்பணம் வீண்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட (கோ அபிஷேகபுரம் மண்டலம் 5) உறையூர் பகுதியில மின்னப்பன் தெருவில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக உறையூர் பகுதியில் குடிநீர் சப்ளை ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவு மக்களுக்கு தான் தண்டனை. மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. திருச்சி மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு உதவி ஆணையர், ஒரு உதவி செயற் பொறியாளர், இவர்களுக்கு தனியாக குளிர்சாதன அறை, அதைத்தவிர ஒவ்வொரு வார்டுக்கும் இளநிலை பொறியாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆக இத்தனை பேரும் இருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளன. இதனால் யாரும் தங்களுடைய உட்பட்ட பகுதியை தினமும் ஆய்வு செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது . தங்கள் பணியை சரியாக செய்து இருந்து இருந்தால் இவ்வளவு பெரிய நிலை நடந்திருக்குமா? பல்வேறு பகுதியில வீட்டுல இருக்கிற குப்பைகளை மட்டுமே வாங்குகின்றனர். அதுவும் தனியார் பணியாளர்கள். சாக்கடைகளை மெயின் பகுதியில மட்டுமே தூர்வாருகின்றனர். தெருக்களின் உள்ளே சாக்கடை சுத்தமாகவோ தூர்வாருவதே கிடையாது.

திருச்சி நகராட்சியாக இருந்த போது கூட குடிநீர் விநியோகம் தினமும் ஆறு மணி நேரம் கிடைத்தன. காலை 6 to 8 10 to 12 இரவு 10 to 12 இந்த நேரங்களில் குடிநீர் கிடைத்தது.
மாநகராட்சியாக திருச்சி தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இரண்டு மணி நேரம் கூட குடிநீர் வழங்க முடியவில்லை.
இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீண் .
இந்தத் துறையின் இதே தொகுதியை சேர்ந்த அமைச்சர் கே என் நேரு நடவடிக்கை எடுப்பாரா ? என திருச்சி ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .