ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.
திமுகவை சேர்ந்த ஆபாச பே பேச்சு அமைச்சர் பொன் முடியை கண்டித்து
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெண்களை ஆபாசமாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் அறிவுறுத்தலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 22.4.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி ஒத்தக்கடை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என மாநகர் மாவட்ட செயலாளார் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.