Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் ஏற்பாட்டில் 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்:ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி. மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு.

0

'- Advertisement -

2026 சட்டசபை தேர்தலில்

திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் பேச்சு.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசால், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ,மாணவிகளுக்கு திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி கூட்டம் நேற்று மாலை திருச்சி ஜங்ஷன் எதிரில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோயில் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்கள் மு.பரஞ்ஜோதி (வடக்கு), ப.குமார் (தெற்கு), ஜெ.சீனிவாசன் (மாநகர்)ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், எஸ்.வளர்மதி,முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி ,பூனாட்சி,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி,சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் அறிவழகன் வரவேற்று பேசினார்.

 

நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, நீட்தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்டு உயிர் நீத்த 22 மாணவ, மாணவிகளுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் பேசுகையில்,‘‘தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கூறிய நீட் தேர்வு ரத்து ரகசியம் என்னாச்சு என்பதை விளக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் அன்று முதல் இன்று வரை மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி வரும் திமுகவால் 22 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இனியும் திமுகவின் நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சி கூட்ட நாடகங்களை மக்கள் நம்பமாட்டார்கள். இனியாவது திமுக அரசு மாணவர்கள் உயிரிழப்பை திமுக அரசு தடுக்க வேண்டும்.இல்லாவிட்டால், 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கம், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’’, என்றனர். முடிவில் திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் அழகர்சாமி நன்றி கூறினார்.

 

நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,

ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கவுன்சிலர் சி.அரவிந்தன், இணை செயலாளர் ஜாக்குலின்,மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே சி பரமசிவம், அணி செயலாளர்கள் இளைஞர் அணி ரஜினிகாந்த், ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, ராஜேந்திரன், சகாபுதீன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி,புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன்,கலீல் ரகுமான்,நாகநாதர் பாண்டி, ரோஜர்,கலைவாணன், வழக்கறிஞர்கள்

முல்லை சுரேஷ்,முத்துமாரி, வரகனேரி சசிகுமார்,ஜெயராமன்,தினேஷ் பாபு ,கங்கைமணி, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சிந்தை முத்துக்குமார், டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ ,

கௌசல்யா,ஜெயஸ்ரீ மற்றும் நிர்வாகிகள் கலைப் பிரிவு பொருளாளர் சாதிக் அலி,அக்பர் அலி,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், இன்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு,கீழக்கரை முஸ்தபா, பாலக்கரை ரவீந்திரன்,ஜங்ஷன் பூக்கடை முத்துக்குமார்,புத்தூர் பாலு,தென்னூர் ஷாஜகான், வாழைக்காய் மண்டி சுரேஷ்,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் ,சிங்காரவேலன், நத்தர்ஷா, இலியாஸ், அப்பாக்குட்டி, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், வசந்தம் செல்வமணி, ஆனந்த், கிராப்பட்டி கமலஹாசன், தர்கா காஜா, கமால் முஸ்தபா, எடத்தெரு பாபு, சிராஜுதீன், ஜெயக்குமார், ரபீக், ராஜ்மோகன், என்.டி. மலையப்பன்,வெல்லமண்டி கன்னியப்பன், ரமணிலால், ஐ.டி.நாகராஜன், டைமண்ட் தாமோதரன்,அக்பர் அலி, பீமநகர் சீனிவாசன், கீழக்கரை முஸ்தபா,கல்லுக்குழி முருகன், ரமணிலால், ஒத்தக்கடை மகேந்திரன், எஸ்.எம்.டி. மணிகண்டன்,மற்றும் கே.டி.ஏ. ஆனந்தராஜ்,

முத்தையா,அரவானூர் பன்னீர்செல்வம்,காசிபாளையம் சுரேஷ் குமார் சிங்கமுத்து,ஈஸ்வரன்,கதிர்வேல், குமார், பொம்மாசி பாலமுத்து, தேவா,வெஸ்லி குருமூர்த்தி, ஆசைத்தம்பி,வண்ணார்பேட்டை ராஜன், உடையான்பட்டி செல்வம்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்:

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் அவைத்தலைவர் சமயபுரம் ராமு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ்,இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர்,இளைஞர் அணி நிர்வாகிகள் புங்கனூர் கார்த்திக்,தேவா,

வழக்கறிஞர் அணி வெங்கடேசன்,

ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி முத்து கருப்பன், ஆதாளி,கோப்பு நடராஜ்,, இன்ஜினியர் ஜெயக்குமார்,

அழகாபுரி செல்வராஜ், எஸ் எஸ். முத்தையா,சாத்தனூர் வாசு, கேசவன், இபி. ஏகாம்பரம்,

சமயபுரம் ராஜேந்திரன், துறையூர் பிரகாஷ்,கவிதை மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 

திருச்சி புறநகர்

தெற்கு மாவட்டம்:

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட , அவைத் தலைவர் அருணகிரி,

பொருளாளர் நெட்ஸ் இளங்கோஒன்றிய செயலாளர்கள் டி..என்.சிவக்குமார்

எஸ்.கே.டி.கார்த்திக், ராவணன், நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், கூத்தைபார் முத்துக்குமார், மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற ராஜ மணிகண்டன்,

பாசறை விடிஎம்.அருண் நேரு,உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.