திருச்சி உறையூர் 10வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீரால் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி . கண்டுகொள்ளாத திமுக கவுன்சிலர் . பாதிக்கப்பட்டு இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் .
திருச்சி உறையூர் பகுதி 10வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நேரில் ஆறுதல்.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் .
போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் கோரிக்கை .
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்டதும், மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன் தெரு , பனிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது
இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் , அந்த வார் திமுக கவுன்சிலர் முத்துக்குமாரிடமும் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்றரை வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகிய பெண்கள் என மொத்தம் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறையூர் பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர் .

மேலும் அவர்கள் இறப்புக்கு காரணம் சாக்கடை நீர் கலந்தது தானா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள குடிநீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் .
மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் இந்த பரபரப்பு சூழல் நிலவிய நிலையில் அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டது
மேலும் இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்..
எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இந்த நிலை நீடிக்கின்றது எனவும், ஆனால் அதிகாரிகள், கவுன்சிலர் முத்துக்குமாரின் அலட்சிய போக்காலே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், முறையான குடிநீர் முறையான சாக்கடை வசதி கொசுத்தொல்லை இவைகளை சரி செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளோம், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என்றும் கூறிய நிலையில் இன்று மாலை பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் , முன்னாள் மாநகராட்சி துணை மேயர் ஜெ. சீனிவாசன் அப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தனது ஆறுதல் தெரிவித்தார் . மேலும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பேசுகிறேன் என உறுதி கூறியுள்ளார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ரஜினிகாந்த் , தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வெங்கட் , பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா , ரோஜர் , மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர் .