Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளி மாணவனுக்கு குளிர் பானத்தில் மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த நபர் மீது போக்சோ வழக்கு

0

'- Advertisement -

விருதுநகர் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடிக்கச் செய்து நிர்வாணமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

Suresh

சிவகாசி மேற்கு பகுதி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் சாம் டேவிட்( வயது 25). இவர் விருதுநகர் தனியார் பள்ளியில் நடந்து வரும் பொரு ட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை பழுது நீக்கும் மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார். மற்றும் பொருட்காட்சி நடைபெற்று வருவது பற்றி பொது மக்களிடையே விளம்பரப் படுத்துகின்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பொருட்காட்சியில் விருதுநகரை சேர்ந்த இருவரும் தங்களுக்கு கோடைகால விடுமுறை என்பதால் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் விளம்பர பதாகைகள் தயாரிக்க வேண்டுமென பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிவகாசியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்த சாம்டேவிட், பள்ளி மாணவர்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்க கொடுத்துள்ளார்.

 

மதுவை கலந்த குளிர்பானத்தை குடித்த இருவரும் மயக்கமடைந்து வீட்டினுள் படுத்திருந்த நிலையில் கிடந்துள்ளனர். திடீரென மயக்கம் தெளிந்து எழுந்த தீபன்சக்கரவர்த்தி தான் நிர்வாண கோலத்தில் படுத்திருந்ததைய றிந்து அதிர்ச்சியுடன் அருகில் படுத்திருந்த அழகு மணியை எழுப்பி பூட்டியிருந்த வீட்டைத் திறந்து வெளியேறி நேராக சிவகாசி காவல் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே போதையில் தனதுவீட்டில் படுத்திருந்த சாம் டேவிட் காவல் நிலையத்தில் பள்ளி மாணவன்( தீபன் சக்கரவர்த்தி) புகார் தெரிவித்ததை யறிந்து தலை மறைவானார். நடந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் சிவகாசி காவல் நிலையத்திற்கு வந்து, போலீசார்கள் நடந்த சம்பவத்தின் உண்மையான நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, எந்த ஒரு குற்றம் நடந்திருந்தாலும், யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவன் தீபன் சக்கரவர்த்தியின் உறவினர் முத்தீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்க செய்து மயக்கமடைந்த நிலையில் பள்ளி மாணவனை பாலியல் தொல்லை செய்ததாக சாம் டேவிட் மீது போச்சோ வழக்கு பதிவு செய்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் தலைமறைவான சாம்டேவிட்டை கைது செய்து உள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.