Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் . பகுதிகள் விபரம்

0

'- Advertisement -

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

 

இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 19.4.2025 சனிக்கிழமை மின் தடை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

 

Suresh

திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்.ஏ.பி.பி. குடிநீரேற்று நிலையம்,

 

தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தோகூர், திருவானைக்காவல், அம்மா மண்டபம் மற்றும் நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய திருச்சி செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மால்வாய் உயர் அழுத்த மின் பாதை மற்றும் பூவாளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் 11 கே.வி. அன்பில் உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை கல்லக்குடி புதிய சமத்துவபுரம், லெட்சுமிநகர், ஆமரசூர், தென்னரசூர், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி மற்றும் ஆதிகுடி, கொன்னைக்குடி, ஜே.ஆர்.புரம், குறிச்சி, அன்பில், பருத்திக்கால், கீழஅன்பில் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.