மணல் வாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில் தீர்மானம்.
மணப்பாறைகளை உடனடியாக திறக்க வேண்டும் , கட்டுமான தொழில் பாதிக்கும் :
எம்.சாண்ட் விலை உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில் தீர்மானம்.

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் பொன் குமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஜெகதீசன் முன்னிலையில் மாநில செயலாளர் யுவராஜ் வரவேற்று பேசினார்.
தொழிற்சார்ந்த அதாவது கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பாக தற்போது மணல் மற்றும் எம். சாண்ட் தட்டுப்பாடு இந்த தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே அரசு உடனடியாக தேவையான மணல் குவாரிகளை சட்டத்திற்கு உட்பட்டு திறந்திட வேண்டும் என்று முதலமைச்சரை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது அதுபோல எம் சாண்ட் யூனிட் விலையை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டிருக்கிறது,
ஏற்கனவே டீசல் விலை உயர்வு,சுங்கச்சாவடி கட்டண உயர்வு போன்றவற்றால் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் இந்த எம்சாண்ட் விலை உயர்வு கட்டுமான தொழிலை பாதிக்கும் என்பதால் விலை உயர்வை திரும்ப பெற பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சரை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தெருவை அடையாளப்படுத்தி மரங்களை நட்டு பசுமை மற்றும் தூய்மை தெருவாக பராமரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது வரும் ஜூன் மாதம் ஏலகிரியில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகளுக்கு பயிற்சி நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது