பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தை மிஞ்சிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
அன்பார்ந்த கட்சி உறவுகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நாம் கடினமான காலங்களை கிட்டத்தட்ட கடந்து விட்டோம்.
இன்னும் சில மாதங்கள் தான்.
நமக்கான வெற்றியும், அங்கீகாரமும், பெருமையும், லட்சியமும் இன்னும் இருநூறு நாட்கள், கால தொலைவில்தான் உள்ளது.
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், நமது மக்கள் செல்வர் கை காட்டுகின்ற பாதையில் நாம் செல்லுகின்ற பொழுது, எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது *நமது பலத்தைப் பொறுத்து, அவரவர் தயாரிப்பிலும், முன்னெடுப்பிலும் தான் உள்ளது.
எப்பாதையாக இருந்தாலும், அது எவ்வளவு தூரமாக இருந்தாலும், நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து ஆழமாகவும், உறுதியாகவும் செயல்பட்டால், நிற்காமல் பயணித்து போகுமிடம் சேர முடியும்.
நமக்கான எதிர்காலத்தை முடிவு செய்ய பொதுச் செயலாளர் இருக்கிறார்.
நேரமும் காலமும் கனிந்து வரும் பொழுது, பொதுச்செயலாளர் நமக்கு இடும் கட்டளையை, வைக்கும் இலக்கை வென்று வர, வெறும் வாய்ப்பு பந்தல் உதவாது.
அரசியல் யுத்தங்களில் வெற்றி பெற நித்தமும், எவ்வித எதிர்மறை இல்லாமல், நம்மை தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
செய்யும் தொழிலே தெய்வம்” என்பது முத்தோர் பழமொழி. ஒரு வேலையை எவ்வித சமரசமும் இல்லாமல், தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், இது கண்டிப்பாக வெற்றியை கொண்டு வரும் என்பதே அதன் சாராம்சம்.
நாம் பல உதாரணங்களை பார்க்கலாம். சிலர் கெட்டவர்களாகவோ, துரோகிகளாகவோ இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். காரணம் தொய்வில்லாத ஓட்டம், எதிர்பார்ப்பு இல்லா உழைப்பு, எடுத்த காரியத்தை முடிக்கின்ற வல்லமை.
அவர்களே வெற்றி பெறும் பொழுது, எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காத தொண்டர்களும் நிர்வாகிகளும் நம்முடன் இருக்கும் பொழுது,
எடுத்த சத்தியத்திற்காக, பின்பற்றும் கொள்கைக்காக, கண்ணியமிக்க, தொண்டர்களுக்காக இயக்கம் நடத்தும் சுயநலமில்லா, பத்தரை மாதத்து தங்கமே நமக்கு பொதுச் செயலாளராக இருக்கும் பொழுது, வீரியத்துடன் அடித்து ஆடி, வென்றே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நமக்கான போராட்ட காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது நாம் சந்திக்க போகும் யுத்தம்.
யுத்தத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

நாமும், நம்மை நம்பி உள்ள அத்தனை நிர்வாகிகளும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இத்தனை ஆண்டு காலம் நமக்காக விட்டுக் கொடுத்த நம் குடும்பத்திற்காக வெற்றி வெற்றி ஆக வேண்டும்.
நமது எதிர்காலத்திற்காக வெற்றி பெற்றே ஆகவேண்டும்.
அதற்கு, வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை, தமிழ் புத்தாண்டாம் இந்நாளில் ஆரம்பித்து, இனிதே தொடங்குவோம்.
ஒவ்வொரு பூத்திலும் சுமார் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஒவ்வொரு நிர்வாகியும், தாம் குடியிருக்கும் பூத்தில், குறைந்தபட்சம் நானூறு பேர், அதாவது நூறிலிருந்து நூத்தி முப்பது குடும்பங்களுடன் தொடர்பில் இருந்தால் போதும்.
பொறுமையாக, தொடர்ச்சியாக, அவர்களுக்கு நம்பிக்கையூட்டினால் கண்டிப்பாக அவர்கள் நம்மவர்களாக மாறுவார்கள்.
அஸ்திவாரம் ஆழமாகவும், உறுதியாகவும் இருந்தால், ஒரு கட்டிடத்தை, எப்பொழுது வேண்டுமானாலும், எவ்வளவு உயரமாக இருந்தாலும், அதிக எடை கொண்டாலும் தாங்கும்.
இதுவே தேர்தல் அரசியலின் அடிப்படை.
( பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூட இந்த அளவு திட்டமிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது )
“Luck favours the brave”.
அதிர்ஷ்டம், துணிச்சலுடன் காத்திருப்பவர்களை மட்டும்தான் வந்து சேரும் என்பது லத்தின் பழமொழி.
நம்மை தயார் செய்து கொள்ளுவோம்.
நமக்காக நம்மை தயார் செய்து கொள்ளுவோம்.
நாம் தயாராக இருந்தால், தற்காலிக தோல்விகளை வென்று, நிரந்தர வெற்றி பெறுவோம்.
நமக்கு அடையாளம் அளித்த, நமது அடையாளமாம் மக்கள் செல்வரின் நம்பிக்கையை மெய்ப்பித்துக் காட்டுவோம், என்று இப்புத்தாண்டில் சபதம் எடுப்போம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.