மக்களால் நான், மக்களுக்காகவே நான் என போராடும் திருச்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன். அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மேயர் அன்பழகன்.
திருச்சி ஸ்ரீரங்கம் மண்டலத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் ரோடு போடுவதற்கு திட்டம் அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை . மாநகராட்சியின் இந்த மெத்தன போக்கை கண்டித்து 14வது வார்டு ஆஇஅதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மாநகராட்சி அதிகாரிகள் முடிவு கூறினால் தான் போராட்டம் கைவிடப்படும் என அரவிந்தன் கூறிய பின்பு சம்பவ இடத்திற்கு வந்த வார்டு செயற் பொறியாளர் ஜெயக்குமாரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் பத்து நாட்களுக்குள் சாலை பணியை முடித்து தருவதாக உறுதி அளித்ததன் பெயரில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதிகாரி கூறியபடி வேலை நடக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கூறினார்.
மேலும் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கூறுகையில் மலைக்கோட்டைக்கு செல்லும் முக்கிய பாதையான சரக்கு பாறை சாலையை மேம்படுத்த திட்டங்கள் அறிவித்து நிதி ஒதுக்கி இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் தொடங்கப்படவில்லை . மேயர் அன்பழகன் அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக கூறினாலும் அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளில் எந்த ஒரு பணியும் தொடங்கப்படவில்லை . தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் வார்டுகளை மேயர் அன்பழகன் புறக்கணித்து வருகிறார், நான் கவுன்சிலராக இருக்கும் வரை எனது வார்டு மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் ஏன தெரிவித்தார் .