திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவா்கள் இருவா் நேற்று புதன்கிழமை லாரி மோதி உயிரிழந்தனா்.
குளித்தலை மாவட்டம், அய்யா்மலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஸிஏ மாணவா்களான மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியை சோ்ந்த கருப்பையா மகன் இன்பராஜ் (வயது 19), புதுக்கோட்டை மாவட்டம், செவகல்பட்டியை சோ்ந்த பழனிச்சாமி மகன் பூவரசன் (வயது 18) ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
இவா்கள் ஆண்டவா் கோயில் பகுதியில் குளித்தலை சாலைக்கு திரும்பிய நிலையில், திருச்சி நோக்கி வந்த லாரி திடீரென மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அவா்களைக் கொண்டு சென்று. சிகிச்சைக்கு சேர்த்தனர் . அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர் . இதையடுத்து மணப்பாறை போலீஸாா் இருவா் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான முத்தப்புடையான்பட்டி மேலகளம் அந்தோணி மகன் ஆரோக்கிய ஆண்ட்ரூஸ் (வயது 29) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.