ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்.
நேற்று புதன்கிழமை 09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.வின்சென்ட் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் பகுதிகளில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடன் ரோந்து சென்று சோதனை சாவடியில் 4 ல் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இரண்டு ஆம்னி வேன்களை நிறுத்தி சோதனை செய்ததில் மேற்படி இரண்டு ஆம்னி வாகனங்களில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டு மேற்கொண்டு விசாரணை செய்ததில் பிடிபட்ட முதல் வாகனத்தில் 18 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த
வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த முகமது அலி மகன் நசுருதீன்,
அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த அமானுல்லா மகன் ஆசிப் அலி (வயது 25) இஸ்மாயில் ( வயது 45)
, காட்டூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த செபாஸ்டின் மகன் ஜெயசீலன் (வயது 22), பத்மாபுரம் சையது மகன் இஸ்மாயில் (வயது 35) ஆகியோரிடம் இருந்து
மூட்டைகளையும், மேலும் விசாரணை செய்ததில் பாப்பா குறிச்சி வீதி வடங்கன் செல்லும் சாலை அருகே மறைத்து வைத்திருந்த 31 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளி இஸ்மாயில் என்பவர் மகன் முகமது சுலைமான் ( வயது 19) ஆகிய ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தமாக 3050 ரேஷன் அரிசியை கைப்பற்றி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.