Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக தெற்கு மாவட்ட மாநகர பகுதிகளில் நீர் மோர் பந்தல்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

 

கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மார்க்கெட் மயிலம்சந்தை மற்றும் பாலக்கரை பகுதி பலக்கரை ரவுண்டானா அருகில் பகுதி திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை மாநகர செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்கள் வழங்கினார்.

Suresh

தண்ணீர் பந்தலில் இளநீர், பானகம், மோர், சர்பத், மற்றும் தர்பூசணி பழங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

 

நிகழ்வில் பகுதி செயலாளர்கள்

டி பி எஸ் எஸ் ராஜ்முஹமத் ,

ஆர் ஜி பாபு மற்றும் பகுதி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.