ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார் .
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , மேயர் அன்பழகன் . தில்லை நகர் பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் நாகராஜன் , அண்ணா நகர் பகுதி செயலாளர் கமால் முஸ்தபா, அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் , மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் ஸ்ரீரங்கம் ஆனந்த் , வட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் , மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஆசிப் . ஆனந்தன், ,ஆரிப் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அன்வர் பாஷா , இக்பால் அஹ்மத், இலியாஸ் அஹ்மத், இர்ஷாத் அஹ்மத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த மைதானத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அதன் உரிமையாளர் கூறுகையில்,
கால்பந்து, கிரிக்கெட் மற்றும் சிறிய அளவிலான பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா திருமண நாள், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் கால்பந்து , கிரிக்கெட் மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார் .