தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி.
தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்குதல்,
நாட்டில் பறவை இனங்கள் தற்போது அழிந்துகொண்டு வருகிறது. பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சங்களின் வாயிலாக பல நூறு மரங்களின் விதைகள், தாவரங்கள் , கொடிகள் வளர்ந்து அடர்ந்தக் காடுகள் உருவாகிறது. இந்த உணவுச் சங்கிலி அறுபடாமல் தடுக்க பறவையினங்களை நாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பறவை இனங்கள் சிறுக சிறுக அழிந்துவிடும்.
ஆறு, குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளில் கோடையில் தண்ணீர் வற்றி வருவதுடன், அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளாகக் கட்டி பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுகிறோம். இதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வீட்டு மொட்டை மாடி, ஜன்னல் பகுதி, வாசல் பகுதி, தோட்டம், நீர்நிலைகள் மற்றும் மரங்கள் அருகில் உள்ள வீடுகளில் வழங்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு மண்பானையில் தண்ணீர் வைத்தால், அது நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் முழ்கி குளித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவும். நம்மால் முடிந்த அளவு பறவையினங்கள் கோடையின் கெடுமையால் அழியாமல் காத்திட சிறிய முயற்சிகள் தான் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது. சூழலின் உயிர்ப்புக்கு பறவைகள் மிகவும் அவசியம்.
இன்று வியாழக்கிழமை காலை பொன்மலையடிவாரம் பகுதியில் தொடர்ந்து மரங்கள் அடர்ந்த பகுதியில் கொடுக்கபட்டது.
பறவைகளை காக்கும் நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்தது.
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா, மெக்கானிக் மணி, என்.வெங்கடேஷ், தேவிகிருஷ்ணமூர்த்தி, மலைக்கோட்டை தாமு, சுமன், சுதன்,மற்றும் கலந்துக் கொண்டார்கள்.