திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ஜேகே நகர் அருகே இன்று நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான S.கோகுல இந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மண்டல செயலாளர் அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்..
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் எ.ஜாக்குலின், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் கே.அப்பாஸ், பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.