கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சி பாராளுமன்ற தொகுதி முழுவதும் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில் எம்பி திருநாவுக்கரசர் திருச்சி தொகுதி பக்கம் காணவில்லை என்ற போஸ்டர் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து யார் அந்த சார் ? என அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது .

இதனைத் தொடர்ந்து தற்போது திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ‘அந்த தியாகி யார்?’என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘டாஸ்மாக் ஊழல்- பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ.1,000 கோடி, உரிமம் பெறாத பார்கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்கள் கேள்வி என்றும், 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.