எடப்பாடி- அமித்ஷா சந்திப்பு. அதிமுகவுக்கு 120., என்டிஏவுக்கு 114. டீலிங் ஓகே . விரைவில் அதிமுகவில் சசிகலா. ஓபிஎஸ் டிடிவி .
பாஜகவுடன் இனி எந்த ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என அதிமுகவினர் அதிரடியாக பேசிய நிலையில் திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திடீரென சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
கூட்டணியைத் தவிர பேசுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என அதிமுகவினரே கூறி வரும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையும் நிறைவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதிமுக 120 தொகுதிகளிலும், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் 114 தொகுதிகளிலும் போட்டியிட முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருப்பார் என அதிமுகவினர் திட்டவட்டமாக அமித் ஷாவிடம் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக – திமுக தயாராகி வருகிறது. திமுகவை பொருத்தவரை அதன் தலைமையில் தான் கூட்டணி. மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அந்த கட்சி கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி விவகாரத்தில் மதில் மேல் பூனையாக இருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக தவிர பெரிதாக எந்த கட்சிகளும் இல்லாத நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பல தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டது இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தள்ளப்பட்டார்.
முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு பிறகு அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு கூட்டணி முறிந்த நிலையில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிரடியாக அறிவித்தார் ஜெயக்குமார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதன்முறையாக அறிவித்ததும் அவர் தான். அதே நேரத்தில் கட்சியில் இருந்த எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர வேண்டும், பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்சியின் நெருக்கடியை சமாளிக்க நேற்று திடீரென டெல்லிக்குச் சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையிலேயே அதை விமர்சித்தும் இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் கட்சி அலுவலகத்தை பார்க்கத் தான் வந்திருக்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும் இரவோடு இரவாக அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, சி.வி சண்முகம், எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணியை தவிர அதிமுக பாஜகவுடன் பேசுவதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கூட்டணி ஆட்சி என அமித் ஷாவும் உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் அதிமுக 120 தொகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் 114 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
மேலும் தேமுதிக பாமக உள்ளிட்ட பிற கட்சிகளையும் கூட்டணிக்குள் ஒருங்கிணைக்க அமித்ஷா உத்தரவிட்டு உள்ளாராம். முதற்கட்ட பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்த நிலையில் நேற்று இரவே டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை புறப்பட்டு அதிகாலையில் வருவார் எனக் கூறப்படுகிறது. மேலும் விரைவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் விரைவில் அதிமுகவில் விஜயம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.