திருச்சி பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் அதிமுகவை சேர்ந்த இஸ்லாமியர் நடத்திய 25 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா .
திருச்சி கோட்டை பில்லுக்கார தெரு ஸ்ரீ சங்கவி ஆண்டவர் ஆலயத்தின் முன் அல்லிமால் தெரு, ஸ்வான் கார தெரு, பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் க்கு மூன்றாவது வார 25 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது .
இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியில் மதியம் நீர்மோர் பந்தல் , மற்றும் அன்னதானம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது .
இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் தெருக்களில் உலா வந்து சமயபுரம் புறப்பட்டது . முன்னதாக 25 ஆம் ஆண்டு பூச்சொரிதலை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது .

25 ஆவது வருடமாக நடைபெறும் இந்த பூச்சொரிதல் விழாவினை அதிமுக 44 வது வார்டு வட்ட பொருளாளரும் சுவான் கராத்தெரு, அல்லிமால் தெரு, பில்லுக்கார தெரு, இளைஞரணி தலைவருமான இஸ்லாமியரான அபுபக்கர் என்னும் சேட்டான் அப்பகுதி நண்பர்கள் குழு உடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் .
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் அரவிந்தன் , அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
சமயபுரம் மாரியம்மனுக்கு தொடர்ந்து 25 ஆண்டுகளாக பூச்சொரிதல் விழாவை எடுத்து நடத்தும் இஸ்லாமியரான அதிமுகவை சேர்ந்த அபுபக்கரை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர் .